Wednesday, 31 October 2012


ஒரு தலை காதல் 



என் உயிரே ......

என்னுள்ளம் ஏக்கத்தில் தவிக்குதே !..

நீஇன்றி நான் இல்லை என்ற நிலையி ல்

என்மீது உனக்கேன் இரக்கம் பிறக்கவில்லை  ?......

காதலில் காத்திருப்பது ஒரு சுகமாம் !...

எனக்கு மட்டும் ஏன் அது ஒரு நரகமாய் ?...

பொய்யாகக் கூட ஒரு புன்னகை

சிந்தாமல் புறக்க ணி த்தல் சரியோ ?

தவம் கிடக்கிறேன் நானும் .....

உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை

வருமென்று ......

தினம் தினம் நான்

செத்து செத்து பிழைக்கிறேன் ....

மெழு கா ய் உருகி ..

முள் மீது தூங்கி .....

ஒரு தலையாய் காதலில்

எத்தனை நாள் நானும் வாழ்வேன் ?..

மடிந்து போ !என்று சொன்னாலும் பரவா யில்லை .....

மறந்துபோ !என்று சொல்லிவிடாதே !...

முகத்தை காட்டிவிடு !..

முடிவை சொல்லி விடு !..

இனிமேலாவது என்னை வாழவிடு !......

2 comments: