கைம்பெண்ணின் கவிதை
காதலர் தினத்தன்று
காதலுடன் நீங்கள் தந்த ரோஜா
காய்ந்த சருகாய் இன்றும் என்
காதல் புத்தகத்தில் ......
அதை கொடுத்த நீங்கள் எங்கே ?
மரணமென்பது ஆற்றமுடியாத
ரணம் உண்மைதான் !
கரைந்தது உங்கள் சாம்பல் மட்டுமே !
கரையாமல் இன்றும் வாழ்வது உங்கள் நினைவுகள் மட்டுமே !
துயரம் துரத்தினாலும்
கவலை வாட்டினாலும்
கலங்காது நிற்பேன் !
நீங்கள்
என் உயிரோடு
கலந்திருப்பதால் !
கண்ணீரை மறைத்து
கனத்த இதயத்தோடு
வாழ்கிறேன் நானும் ....
நம் குழந்தைகளுக்காக ....
ஆணின் காதல்
தோற்றாலும் ஜெயித்தாலும்
அதுஒரு சரித்திரம் !
பெண்ணின்காதலோ
அவளுக்குள் தோன்றி ,
அவளுடன் வாழ்ந்து ,
அவளோடுமடியும் ஒரு காவியம் !
தாய் சுமந்தாள் பத்து மாதம்
நான் சுமப்பேன் உங்களை
என் இதயத்தில் .....,
என் இறுதி மூச்சு
நிற்கும் வரை !...
No comments:
Post a Comment