Sunday, 4 November 2012

Thank you my friend- Tamil Poem

நன்றி நண்பா !



நண்பா !....

நட்பால் நெருங்கினோம் !....

காதலால் 

காட்சிப் பொருள் 

ஆனோம் !...

நேசத்தால் இணைந்தோம் !...

பந்தங்களின் பாசத்தால் 

பிரிந்தோம் !.....

உனக்கென ஒரு வாழ்க் கை 

அதில் இன்று வேறுஒரு துணை ?...

வாழ்த்துக்கள் நண்பா !...

எனக்கும் ஒரு வாழ்க் கை இருப்பதை 

நினைவு படுத்தினாய்! ..

நன்றி நண்பா !...

நானும் வாழ்ந்துகாட்டுவேன் !..

உன்னை மறந்து 

என்னை நினைந்து ..

சந்தோஷமாய் வாழ்வேன் ....

உற்றதுணை யுடன் நானும் !.....

என்னை எனக்கு புரியவைத்தாய் !....

நன்றி நண்பா !......




No comments:

Post a Comment